​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவசேனாவுடன், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங். கூட்டணி?

Published : Nov 14, 2019 1:43 PM



சிவசேனாவுடன், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங். கூட்டணி?

Nov 14, 2019 1:43 PM

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள், ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்கட்சிக்கும் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜகவிடம், சிவசேனா முன்வைத்த, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பாதிக்குப் பாதி பங்கு ஆகிய கோரிக்கைகளை, தற்போது, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் முன்வைக்கிறது.

மேலும், காங்கிரஸ் தரப்பில், துணை முதலமைச்சர் பதவியை 5 ஆண்டுகளுக்கு தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கைகளை, உத்தவ் தாக்ரே தலைமையினா சிவசேனா ஏற்றுக் கொண்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, சிவசேனாவுடனான கூட்டணி ஆட்சியில் இடம்பெறும்போது, முன்வைக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், மும்பை டிரைடண்ட் ஹோட்டலில் ஒன்றுகூடி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.