​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாய ஆலை கழிவு நீரை வெளியேற்றக்கூடாது - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Published : Nov 14, 2019 1:38 PM

சாய ஆலை கழிவு நீரை வெளியேற்றக்கூடாது - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Nov 14, 2019 1:38 PM

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கும் சாய ஆலைகள், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றக்கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில் இயங்கிய 300 சாய ஆலைகளில், 50 மட்டுமே அனுமதி பெற்று இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அனுமதி பெறாத ஆலைகள் மூடப்பட்டன. இந்நிலையில் காவிரியில் அதிக தண்ணீர் ஓடுவதால், அனுமதி பெற்ற ஆலைகளில் இருந்து கழிவு நீரை சுத்திகரிக்காமல் இரவு நேரங்களில் வெளியேற்றுவதாக புகார் கூறப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சாமிநாதன் தலைமையில் சாய ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாயக்கழிவு நீரை வெளியேற்ற கூடாது என்றும், அதை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.