​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அருகே சோதனை ஓட்டத்தின் போது தீப்பற்றி முழுவதும் எரிந்த கார்

Published : Nov 14, 2019 1:31 PM

சென்னை அருகே சோதனை ஓட்டத்தின் போது தீப்பற்றி முழுவதும் எரிந்த கார்

Nov 14, 2019 1:31 PM

சென்னை அருகே புதிய ரக கார் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது தீப்பற்றியதில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஒரகடம் செல்லும் சாலையில், மகேந்திரா நிறுவனத்தின் புதிய ரக கார் ஒன்றின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் எஞ்சின் பக்கத்தில் இருந்து கரும்புகை வருவதை கண்ட ஓட்டுநர், உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார். அடுத்த சில நொடிகளில் தீப்பொறி ஏற்பட்டு கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

இதையடுத்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் எரிந்துக் கொண்டிருந்த காரை அணைத்தனர்.