​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Published : Nov 14, 2019 1:01 PM

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Nov 14, 2019 1:01 PM

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள்., குமாரசாமி அரசுக்கு எதிராக அணி மாறியதால் அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்கள், 2023 ஆம் ஆண்டு வரை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்கில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர். முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், 15 பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.