​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துருக்கி அதிபருடனான சந்திப்பை பல மணி நேரம் நீட்டித்து சமாளித்த டிரம்ப்

Published : Nov 14, 2019 11:21 AM

துருக்கி அதிபருடனான சந்திப்பை பல மணி நேரம் நீட்டித்து சமாளித்த டிரம்ப்

Nov 14, 2019 11:21 AM

துருக்கி அதிபருடனான சந்திப்பை நீண்ட நேரம் கொண்டதாக மாற்றி, தன்னை பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானத்தின் மீதான விசாரணையில் பங்கேற்பதை, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் லாவகமாக சமாளித்து, தவிர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீர்மானத்தின் மீதான விசாரணை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனுடன், சந்திப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு, பல மணி நேரங்கள் நீண்டு கொண்டே இருந்தது.

முதலில் ராணுவ மரியாதை, அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் சந்திப்பு, தனித்து இருவரும் பேச்சுவார்த்தை, அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை, மதிய விருந்து, கூட்டாக செய்தியாளர் சந்திப்பு என துருக்கி அதிபருடனான சந்திப்பை பல மணி நேரம் கொண்டதாக டிரம்ப் மாற்றினார்.

இதன்மூலம் தனக்கு எதிரான விசாரணையில் பங்கேற்பதை, டிரம்ப், லாவகமாக தவிர்த்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், தாம் மிகவும் பிசியாக இருப்பதாக, தெரிவித்திருக்கிறார்.