​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!

Published : Nov 14, 2019 11:14 AM

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!

Nov 14, 2019 11:14 AM

மிழக உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருப்பதால் 10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையர் பழனிசாமி தூத்துக்குடியில் இன்று நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் பேசிய அவர், 1 லட்சத்திற்கு அதிகமான உள்ளாட்சி பதவிகளுக்கு, 10 மடங்கு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதால், விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்கவேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் காலையில் கிராம பஞ்சாயத்து தேர்தல் குறித்தும், மதியம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் குறித்தும் அவர் ஆலோசனை வழங்குகிறார். இதில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபால், நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.