​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

Published : Nov 14, 2019 8:05 AM



இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

Nov 14, 2019 8:05 AM

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் வரும் 16ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. சுமார் ஒருகோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலில் அதிபர் பதவிக்கு 35 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயா இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இலங்கை இறுதிப் போரின் போது அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கும் காணாமல் போனதற்கும் இவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்விரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் நள்ளிரவுடன் ஓய்ந்தது. இதனிடையே தேர்தல் ஆணையர் அழைப்பின் பேரில் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.