​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்ட்ராவில் சொந்த தொகுதிகளுக்குத் திரும்பிச்செல்ல எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு

Published : Nov 14, 2019 7:46 AM



மகாராஷ்ட்ராவில் சொந்த தொகுதிகளுக்குத் திரும்பிச்செல்ல எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு

Nov 14, 2019 7:46 AM

காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மும்பையின் டிரடன்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சியின் பிருத்விராஜ் சவுகான், மாணிக் ராவ் தாக்கூர் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். குறைந்த பட்ச செயல் திட்டம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இவ்விரு கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள நிலையில், அகமது பட்டேலை தாக்கரே சந்தித்துப் பேசியதாக வதந்திகள் பரவின. ஆனால் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் இந்த வதந்திகளுக்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இதனிடையே மும்பையில் மலாத் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்.எல்.ஏக்களும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.