​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவசேனா திடீரென விதித்த நிபந்தனைகளை ஏற்கமுடியாது -அமித் ஷா

Published : Nov 14, 2019 7:23 AM



சிவசேனா திடீரென விதித்த நிபந்தனைகளை ஏற்கமுடியாது -அமித் ஷா

Nov 14, 2019 7:23 AM

பெரும்பான்மை பலம் இருந்தால் சிவசேனாவும் தேசியவாத காங்கிரசும் ஆளுநரை அணுகலாம் என்று பாஜக தலைவர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் வேட்பாளர் தேவேந்திர பத்னாவிஸ்தான் என்பதும் சிவசேனாவுக்கு தெரியும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும் தேவேந்திர பத்னாவிஸ் பெயரை முன்மொழிந்து முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க வாக்குகள் சேகரித்ததையும் அமித் ஷா நினைவுகூர்ந்தார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சித்தார்.

சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சியமைக்க பாஜக தயாராகவே இருந்தபோதும் சிவசேனா திடீரென கூறிய சில நிபந்தனைகளை ஏற்க முடியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.