இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடலில் கலந்துவிடும் குப்பைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கடல்பகுதி மாசடைந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற பொருளாதாரம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், பாதுகாப்பான சுற்றுச்சூழல் ஆகியற்றையே தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.