​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பயிரிடுவது குறித்த கருத்தரங்கம்

Published : Nov 13, 2019 6:33 PM

விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பயிரிடுவது குறித்த கருத்தரங்கம்

Nov 13, 2019 6:33 PM

தூத்துக்குடியில் விவசாயிகளுக்கான சிறுதானியங்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரு ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பருவ மழையால், குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் சிறுதானியங்கள் பயிர் செய்வது குறித்து ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

image

இதில் சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி உள்ளிட்டவை விவசாயம் செய்வது மற்றும் விற்பனை செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கண்காட்சியில் சத்து மிகுந்த சிறுதானிய உணவு வகைகள் மற்றும் விதைகள் இடம் பெற்றது.

தமிழ்நாடு வேளாண் துறை மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.