​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாய்க்காலை ஆக்கிரமித்து குவாரி செயல்படுவதாக விவசாயிகள் புகார்

Published : Nov 13, 2019 6:14 PM

வாய்க்காலை ஆக்கிரமித்து குவாரி செயல்படுவதாக விவசாயிகள் புகார்

Nov 13, 2019 6:14 PM

கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் சமீபத்தில் பெய்த கனமழையால் 18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி முழு கொள்ளளவான 26 அடியை எட்டியது. இதையடுத்து சுமார் 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் அத்திப்பாளையம் கிளைவாய்க்காலில் தனியார் குவாரி நிறுவனம் சாலை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை அதிகாரிகள் வாய்க்காலின் நீள அகலத்தை அளந்து மீட்டுத்தரும்படி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற குவாரி உரிமையாளர், கால்வாயை ஏற்கனவே இருந்தவாறு சீரமைத்து தர உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது