​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு

Published : Nov 13, 2019 5:04 PM

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு

Nov 13, 2019 5:04 PM

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்ந்திருப்பதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன், பின் என ஆண்டிற்கு இரண்டு முறை நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட, 1286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகளின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டு தரைமட்டத்திலிருந்து 17.5 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது சராசரியாக 3 மீட்டர் அளவில் உயர்ந்து 14.5 மீட்டர் அளவில் இருப்பதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளும், மழைநீர் சேகரிப்பு திட்டங்களை பொதுமக்கள் சீராக செயல்படுத்தியதுமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.