​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

Published : Nov 13, 2019 3:59 PM

முதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

Nov 13, 2019 3:59 PM

ராமநாதபுரத்தில் சொத்து பிரச்சனையில் முதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

வண்டிக்காரத் தெருவை சேர்ந்தவர் சேதுபதி. இவரது முதல் மனைவி ராணி. குழந்தை பேறு இல்லாததால் மற்றொரு பெண்ணை சேதுபதி 2வது திருமணம் செய்து கொண்டார். இரு மனைவிகளுடன் கணவன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், முதல் மனைவி ராணி சொத்தை பிரித்து தரக்கோரி கேட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. அப்பொழுது காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்த சேதுபதி, ராணியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். அவரை பஜார் போலீசார் தேடி வருகின்றனர்.