​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரிசி ராஜாவை பிடிக்க பாரிக்கு மாற்றாக கபில்தேவ் கும்கி யானை வரவழைப்பு

Published : Nov 13, 2019 2:51 PM

அரிசி ராஜாவை பிடிக்க பாரிக்கு மாற்றாக கபில்தேவ் கும்கி யானை வரவழைப்பு

Nov 13, 2019 2:51 PM

பொள்ளாச்சி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டுள்ளது.

அர்த்தனாரிபளையம் பகுதியில் பயிர்சேதத்தை ஏற்படுத்தி வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டுமே உண்பதால், அதனை அரிசி ராஜா என அப்பகுதியினர் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அரிசி ராஜாவை பிடிக்க நவம்பர் 10ம் தேதி பெருமாள் மலைப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டனர். 

அங்கு கலீம், பாரி என்ற இரண்டு கும்கி யானைகளையும் வரவழைத்தனர். இந்நிலையில், பாரி என்ற கும்கி யானை பாகனின் சொல்லுக்கு கட்டுப்படாததால், அதற்கு மாற்றாக கபில்தேவ் என்ற கும்கி யானையை இன்று வரவழைத்த வனத்துறையினர், தாடகை நாச்சி மலை கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானையை பிடிக்க முயன்று வருகின்றனர்.