​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சீன அதிபர் ஜின்பிங்

Published : Nov 13, 2019 1:31 PM

ஆக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சீன அதிபர் ஜின்பிங்

Nov 13, 2019 1:31 PM

கிரீஸ் நாட்டில் உள்ள ஆக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செல்வதற்கு முன்பாக மனைவி பெங்க் லியூயானுடன்((Peng Liyuan)) ஏதென்ஸ் சென்ற ஜின்பிங்,  அங்கிருந்த பழங்கால சிற்பங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின்போது கிரீஸ் அதிபர் Prokopis Pavlopoulos மற்றும் அவரது மனைவியும் இருந்தனர். சந்திப்பு முடிவில், சீனா மற்றும் கிரீஸ் நாடுகளிலிருந்து  காணாமல் போன பாரம்பரிய நினைவு சின்னங்களை  ஒன்றிணைந்து மீட்பது மற்றும் பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டது.