​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வர வாய்ப்புள்ளது- தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

Published : Nov 13, 2019 1:05 PM

நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வர வாய்ப்புள்ளது- தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

Nov 13, 2019 1:05 PM

நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வர வாய்ப்புள்ளதாக, அத்தேர்தலில் கடந்த முறை பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் உருவ படம், புலியாட்டம், சிலம்பாட்டம் என இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் எந்த தீர்ப்பை அளித்தாலும் அதை ஏற்கவுள்ளதாக தெரிவித்தார்.