​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏழுமலையான் கோவிலில் கருடசேவை

Published : Nov 13, 2019 9:36 AM



ஏழுமலையான் கோவிலில் கருடசேவை

Nov 13, 2019 9:36 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி ஐப்பசி மாதத்துக்கான பௌர்ணமி கருடசேவை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மலையப்ப சுவாமி தங்க, வைர, வைடூரிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

நான்கு மாட வீதிகளில் சுவாமி வலம் வந்தபோது, இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். இந்த சுவாமி வீதி உலா இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது