​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமலையில் மூன்று கட்டங்களாக பிளாஸ்டிக்கு தடை

Published : Nov 13, 2019 8:24 AM



திருமலையில் மூன்று கட்டங்களாக பிளாஸ்டிக்கு தடை

Nov 13, 2019 8:24 AM

திருமலையில் மூன்று கட்டங்களாக பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படும் என்று கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்தார்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளனர் என்றார்.

அதற்கேற்ப மூன்று கட்டங்களாக பிளாஸ்டிக்கை முழுவதும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக தேவஸ்தான அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டீலுகளுக்கு தடை செய்யப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தும் விதமாக உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இதேபோன்று 15 நாட்களில் தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விட கூடிய அனைத்து பக்தர்களும் ஓய்வு அறைகளிலும் ஜல பிரசாதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு அதனை பயன்படுத்துவதற்கான சொம்புகள் மற்றும் பேப்பர் டம்ளர் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். என அவர் தெரிவித்தார்.