​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நவ.18ல் தொடங்குகிறது மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடர்

Published : Nov 13, 2019 7:12 AM



நவ.18ல் தொடங்குகிறது மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடர்

Nov 13, 2019 7:12 AM

மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில் வரும் 17ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது.

மாநிலங்களவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250-ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதன் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய 70-ஆம் ஆண்டு நிறைவும், மகாத்மா காந்தி 150-ஆம் பிறந்த தினமும் கொண்டாடப்பட உள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், வரும் 18-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 13-ஆம் தேதி நிறைவடைகிறது.