​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணை நாளை திறப்பு

Published : Nov 12, 2019 8:13 PM

பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணை நாளை திறப்பு

Nov 12, 2019 8:13 PM

மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனத்திற்காக, நாளை முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் கார் பருவ சாகுபடிக்காக நாளை முதல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த 140 நாட்களில் 384.05 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள இரண்டாயிரத்து 756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.