​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரிசி ராஜா யானையை பிடிக்க வனத்துறை 2ஆவது நாளாக முகாம்

Published : Nov 12, 2019 7:34 PM

அரிசி ராஜா யானையை பிடிக்க வனத்துறை 2ஆவது நாளாக முகாம்

Nov 12, 2019 7:34 PM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானை அரிசிராஜா, தாடகநாச்சிமலை பகுதியில் முகாமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த யானை தாக்கியதில் விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் காயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அரிசிராஜா யானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. நேற்று அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அது வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

இந்நிலையில், அந்த யானை தாடகநாச்சிமலையில் முகாமிட்டிருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குண்டு உருட்டிபாறை, நவமலை, கருவாய்பள்ளம் ஆகிய இடங்களில் அரிசி உள்ளிட்டவற்றை வைத்து, மயக்க ஊசிகளுடன் வனத்துறை ஊழியர்களும், கால்நடை மருத்துவ குழுவினரும் காத்திருக்கின்றனர்.