​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அட்டைப் பெட்டிகளை சுமந்து ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் மாணவர்கள்

Published : Nov 12, 2019 5:28 PM

அட்டைப் பெட்டிகளை சுமந்து ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் மாணவர்கள்

Nov 12, 2019 5:28 PM

ஓசூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையைக் கடந்து பள்ளியில் இருந்த பழைய அட்டைப் பெட்டிகளை விற்பனைக்காக சுமந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லை நகரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் ஓசூர் - ராயகோடா மாநில நெடுஞ்சாலையை இவ்வாறு ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

பள்ளியில் இருந்த பயன்படுத்தப்படாத அட்டைகளை பழைய இரும்புக்கடையில் விற்றுவர பள்ளி நிர்வாகம் இந்த மாணவர்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலை மாநகரான ஓசூருக்கு இந்த சாலை வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள், கார்கள் வந்து செல்கின்றன.

மாணவர்களின் உயிர் மீது அக்கறை கொள்ளாது இவ்வாறு அவர்களை அனுப்பிய பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.