​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூரிலிருந்து - திருப்பதிக்கு புதிய ஏசி பேருந்து

Published : Nov 12, 2019 3:23 PM

திருவள்ளூரிலிருந்து - திருப்பதிக்கு புதிய ஏசி பேருந்து

Nov 12, 2019 3:23 PM

திருப்பதி மற்றும் நெல்லூருக்கு 11 புதிய ஏசி பேருந்துகள்  இயக்கத்தை அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் பென்ஜமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

image

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மண்டலத்துக்கு 3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய ஏசி பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சென்னையிலிருந்து, திருவள்ளூர், திருத்தணி வழியாக 4 புதிய ஏசி பேருந்துகளும், காளஹஸ்தி வழியாக 2 பேருந்துகளும் என 6 பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.

மேலும் சென்னையிலிருந்து நெல்லூருக்கு 5 புதிய ஏசி பேருந்து இயக்கத்தையும் அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் பென்ஜமின்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பென்ஜமின், சென்னையிலிருந்து திருப்பதிக்கு 205 ரூபாய் கட்டணமும்,  நெல்லூருக்கு 245 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்