​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொற்றுநோய் போல் போராட்டங்கள்.. முதலமைச்சர் வேதனை..!

Published : Nov 12, 2019 12:57 PM

தொற்றுநோய் போல் போராட்டங்கள்.. முதலமைச்சர் வேதனை..!

Nov 12, 2019 12:57 PM

மிழ்நாட்டில், தொற்றுநோய் போல் பரவும் போராட்டங்களால், சாலை விரிவாக்க பணிகளுக்கு எங்கும் நிலம் எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

வயதாகி, சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால், கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், அடுத்தவர்கள் குறித்து குறை சொல்வதை கைவிட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில், உள்ளாட்சி தேர்தல் குறித்து, அதிமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவினர் துரிதமாக செயல்பட்டு, அனைத்து இடங்களில் வெற்றியை தமதாக்க பாடுபட வேண்டும் என, கட்சி நிர்வாகிகளை, முதலமைச்சர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலுக்கான கால அளவு குறைவாக இருப்பதாலேயே, முன்கூட்டியே அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதாக தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறைக்கான 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திருப்ப அனுப்பட்டது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் தலைமைக்கு வெற்றிடம் நிலவுகிறது எனக் கூறும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால், கமல் கட்சி ஆரம்பித்திருப்பதாக கூறிய முதலமைச்சர், மற்றவர்களை குறைகூறி, அரசியல் செய்வது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படாத அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைய, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தூது விட்டுக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு, அதிமுகவில் இடமில்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.

அமெரிக்காவில் பேசும்போது மோடி தேசத்தில் இருந்து வந்துள்ளதாக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கூறியதில் தவறு ஏதும் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகப் பள்ளிகளில் காலையில் இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.