​​ ஏர் விஸ்தாரா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி என புகார் - வாய்ப்பே இல்லை என ஏர் விஸ்தாரா நிராகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏர் விஸ்தாரா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி என புகார் - வாய்ப்பே இல்லை என ஏர் விஸ்தாரா நிராகரிப்பு

Published : May 03, 2018 12:38 AM

ஏர் விஸ்தாரா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி என புகார் - வாய்ப்பே இல்லை என ஏர் விஸ்தாரா நிராகரிப்பு

May 03, 2018 12:38 AM

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக, பயணி அளித்த புகாரை ஏர் விஸ்தாரா நிறுவனம் நிராகரித்துள்ளது.

ஏர் விஸ்தாரா விமானத்தில் தமக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக, பயணி ஒருவர் டுவிட்டரில் புகார் தெரிவித்திருந்தார். அவரது இந்த புகாரை மறுத்துள்ள ஏர் விஸ்தாரா நிறுவனம், தாங்கள் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது.

மாறாக விமானம் தரையில் நிற்கும் போது விமானத்திற்குள் நுழைந்த கரப்பான் பூச்சி உணவில் ஏறியிருக்கலாம் என்றும் கூறியுள்ளது. விமானத்திற்குள் பூச்சிகளை ஒழிக்க, தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ள ஏர் விஸ்தாரா நிறுவனம், தங்களது சிறப்பான கவனத்தையும் மீறி இதுபோல, சில பூச்சிகள் விமானத்திற்கு வந்துவிடுவதாகவும், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளது.