​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மகாவீர் சேவா அறக்கட்டளை ரூ.10 கோடி நன்கொடை

Published : Nov 12, 2019 10:28 AM

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மகாவீர் சேவா அறக்கட்டளை ரூ.10 கோடி நன்கொடை

Nov 12, 2019 10:28 AM

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 10 கோடி ரூபாய் வழங்குவதாக மகாவீர் சேவா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து கோயில் கட்டுவதற்கு பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்க முன்வந்துள்ளன.

அந்த வகையில், ராமர் கோவில் கட்ட மொத்தம் 10 கோடி ரூபாய் வழங்குவதாக மகாவீர் சேவா அறக்கட்டளை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் நன்கொடை வழங்கவும், ராமஜென்ம பூமிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கவும் தயார் என்று தெரிவித்துள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவை தலைமையிடமாக கொண்ட மகாவீர் சேவாஅறக்கட்டளை, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.