​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜேப்பியார் நிறுவனம் - வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

Published : Nov 11, 2019 6:46 PM

ஜேப்பியார் நிறுவனம் - வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

Nov 11, 2019 6:46 PM

ஜேப்பியார் கல்வி குழுமம் மற்றும் நிறுவனங்களில் நடந்த சோதனையில் 350 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும், ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான மீன் ஏற்றுமதி நிறுவனம், சிமெண்ட் மற்றும் பால் உற்பத்தி என பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 7-ம் தேதி முதல் நடந்த இந்த சோதனை நிறைவடைந்துள்ள நிலையில் கணக்கில் வராத 5 கோடி ரொக்க பணமும், 3 கோடி மதிப்புடைய தங்க நகைகளும் பறிமுதல் செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் நிர்ணயக்கப்பட்ட தொகையை வாங்கியது போல கணக்கு காண்பித்துவிட்டு, நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலித்து அதை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வரித்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ஜேப்பியார் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.