​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனமகிழ் மன்றங்களில் ஆய்வு நடத்த ஆணை

Published : Nov 11, 2019 6:11 PM

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு நடத்த ஆணை

Nov 11, 2019 6:11 PM

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனைத்து மனமகிழ் மன்றங்களிலும், முன்னறிவிப்பின்றி சோதனை நடத்த கலால்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மனமகிழ்மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில் தேனியில் அதிகளவிலான மனமகிழ் மன்றங்கள் இயங்கி வருவதாகவும், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வி அடைவோரை அடைத்து வைத்து குடும்பத்தினர் வந்து பணம் கொடுத்து மீட்டுச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு விசாரித்தது.

அப்போது விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தேனி மாவட்ட காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்புக் குழு அமைத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி பெற்று தொடங்கப்பட்ட அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சோதனை நடத்த வேண்டும் என கலால் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.