​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டின் மின்சாரத் தேவை 13.2 விழுக்காடு அளவிற்கு சரிவு

Published : Nov 11, 2019 5:46 PM

நாட்டின் மின்சாரத் தேவை 13.2 விழுக்காடு அளவிற்கு சரிவு

Nov 11, 2019 5:46 PM

நாட்டின் மின்சார தேவை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக, வீழ்ச்சியடைந்திருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்றில், தகவல் வெளியாகியிருக்கிறது.

5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் , அண்மை மாதங்களாக, வாகன உற்பத்தி, கட்டுமானத்துறை உட்பட பல்வேறு துறைகளில் தடம்பதித்துள்ள பல தனியார் நிறுவனங்கள், தனது ஊழியர்களுக்கு, விடுமுறைகளை அறிவிப்பதால், உற்பத்தி நிறுத்தம் நடைபெறுகிறது.

இதனால், நாட்டின் மின்சாரத் தேவை, கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படி, 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், 13 புள்ளி 2 விழுக்காடு அளவிற்கு சரிந்திருப்பதாக, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரியவந்திருக்கிறது.