​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீரதம்பதி வீட்டில் திருட முயன்றதாக கைதானவரின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

Published : Nov 11, 2019 5:42 PM

வீரதம்பதி வீட்டில் திருட முயன்றதாக கைதானவரின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

Nov 11, 2019 5:42 PM

நெல்லை கடையம் வீர தம்பதி வீட்டில் திருட முயன்றதாக கைது செய்யப்பட்ட பாலமுருகனின் குடும்பத்தினர், விசாரணை என்ற பெயரில் போலீசார் தங்களை தொடர்ந்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இரவு தங்கள் வீட்டில் திருட முயன்றவர்களை வயதான தம்பதி அடித்து விரட்டி அனைவரது பாராட்டையும் பெற்றனர். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றுவிட்டதாகவும் இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலமுருகனின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் பாலமுருகனின் தந்தை விஷம் குடித்து விட்டதாக கூறியதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் விஷம் குடிக்கவில்லை என்பது தெரியவந்தது.