​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் மழைநீர் ஓடையை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்

Published : Nov 11, 2019 3:18 PM

சேலத்தில் மழைநீர் ஓடையை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்

Nov 11, 2019 3:18 PM

சேலத்தில் கனமழையால் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில், நீர்வழித்தடங்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

இரு தினங்களுக்கு முன் 64 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் சிவதாபுரம் வழியாக திருமணி முத்தாற்றில் பாய்ந்தோடுகிறது. அப்பகுதியில் நீர்வழிப்பாதைகளில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக செஞ்சிக்கோட்டை பகுதியில் ரயில் தண்டவாளம் அருகில் ஓடும் ஓடையை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் சிவதாபுரம், கந்தம்பட்டி பகுதியில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த ஓடை திருமணி முத்தாற்றில் கலக்கும் முகத்துவாரபகுதியில் உள்ள கரைகள் அகலப்படுத்தப்பட்டும் ஆழப்படுத்தப்பட்டும் வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.