​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“கஞ்சா போதையில் அட்டகாசம் செய்தால் சிங்கத்தின் வேட்டையில் சிக்குவீர்கள்” - வைரலாகும் ஆடியோ

Published : Nov 11, 2019 3:10 PM



“கஞ்சா போதையில் அட்டகாசம் செய்தால் சிங்கத்தின் வேட்டையில் சிக்குவீர்கள்” - வைரலாகும் ஆடியோ

Nov 11, 2019 3:10 PM

மதுரை அருகே கஞ்சா போதையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்களுக்கு சினிமா பாணியில் எச்சரிக்கை விடுக்கும் சார்பு ஆய்வாளரின் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் வெளியிட்டிருக்கும் அந்த ஆடியோவில் “கஞ்சா புகைத்துக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டால் சிங்கத்தின் அசுர வேட்டையில் சிக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கிறார்.

அண்ணன் என்ற நிலையில் இருந்து தாம் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக அவர் கூறும் ஆடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.