​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாகனத் தணிக்கையின் போது பெண் உயிரிழப்பு : 5 போலீசார் சஸ்பெண்ட்

Published : Nov 11, 2019 3:01 PM

வாகனத் தணிக்கையின் போது பெண் உயிரிழப்பு : 5 போலீசார் சஸ்பெண்ட்

Nov 11, 2019 3:01 PM

கள்ளக்குறிச்சியில் வாகனச் சோதனையின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் நேற்று காலை தனது தாய் அய்யம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது செந்திலை போலீஸ் ஒருவர் அடிக்க முயன்றதாகவும் அது தவறுதலாக அய்யம்மாள் மீது பட்டு, அவர் கீழே விழுந்து இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் செந்தில் குடிபோதையில் தலைக்கவசம் அணியாமல் வேகமாக வாகனம் ஓட்டி வந்ததாகவும் பிரேக் பிடித்த அதிர்ச்சியில் மூதாட்டி கீழே விழுந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் மூன்று தலைமை காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டநிலையில் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சந்தோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.