​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மன அழுத்தத்தை போக்க சவக்குழியில் படுக்க வைக்கும் வினோத பயிற்சி

Published : Nov 11, 2019 2:56 PM

மன அழுத்தத்தை போக்க சவக்குழியில் படுக்க வைக்கும் வினோத பயிற்சி

Nov 11, 2019 2:56 PM

மன அழுத்தத்தை போக்க  சவக்குழியில் படுக்க வைக்கும் வினோத பயிற்சியை மாணவர்களுக்கு நெதர்லாந்து பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பவுடு பல்கலைக்கழகம், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த வித்தியாசமான பயிற்சியை அளிக்கிறது.

அந்த வகையில் அரை மணி முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் படுக்க மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

யோகா பாய், போர்வை, தலையணை தவிர தொலைபேசி உள்ளிட்ட மற்ற பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

சவக்குழியில் படுப்பது, இந்த பூமியில் நமது வாழ்நாள் குறித்த உண்மையை உணர உளவியல் ரீதியாக உதவும் என்று இத்திட்டத்தின் நிறுவனர் ஜான் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.