​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு- மாவட்ட ஆட்சியர் விசாரணை

Published : Nov 11, 2019 1:20 PM

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு- மாவட்ட ஆட்சியர் விசாரணை

Nov 11, 2019 1:20 PM

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார்.

வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் கோமதி தேர்வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கோமதி, கழிவறையில் மயங்கி விழுந்தததாகவும், அதை பார்த்த சக மாணவிகள் ஆசிரியைகளிடம் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கோமதி, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பள்ளியில் மாணவி உயிரிழந்தது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.