​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகாவில் இடைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

Published : Nov 11, 2019 7:26 AM

கர்நாடகாவில் இடைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

Nov 11, 2019 7:26 AM

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று மனுத்தாக்கல் தொடங்குகிறது.

மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி தனது அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

அதில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 17 பேர் கலந்து கொள்ளாததால் அரசு கவிழ்ந்தது. இதனால் விதிகளை மீறியதாக 17 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதனிடையே, 15 தொகுதிகளுக்கு கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல், டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் மீண்டும் மனு தொடுத்ததால் தேர்தல் நடைபெறுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், மனு மீது 13ம் தேதி முடிவெடுக்கப்படும் என சனிக்கிழமை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து 15 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5இல் திட்டமிட்டபடி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அத்தொகுதிகளுக்கு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.