​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"நான் தான் விராட் கோலி" - டேவிட் வார்னரின் செல்ல மகள் அசத்தல்

Published : Nov 10, 2019 5:13 PM

"நான் தான் விராட் கோலி" - டேவிட் வார்னரின் செல்ல மகள் அசத்தல்

Nov 10, 2019 5:13 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மகள், தன்னை விராட் கோலி எனக் கூறிக் கொண்டே பேட்டிங் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் டேவிட் வார்னர் - கேண்டிஸ் தம்பதியின் மகளான ஐவி மே, பொம்மை பேட்டைக் கையில் வைத்துக் கொண்டு தன்னை விராட் கோலி என்று கூறிக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து வீசப்படும் பொம்மைப் பந்தை ஓங்கி அடிக்கிறார். ஐவி மே-யின் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது.