​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரானின் பிரம்மாண்டமான புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

Published : Nov 10, 2019 4:53 PM

ஈரானின் பிரம்மாண்டமான புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

Nov 10, 2019 4:53 PM

ஈரான் நாட்டில், 5 ஆயிரம் கோடி பேரல்கள் அளவுக்கு வளம் கொண்ட, புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி ((Hassan Rouhani)) அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் அடுத்த பொருளாதார தடைகளால், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில், முன்னணியில் உள்ள ஈரானுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவால், சவுதி அரேபியாவுக்கு கிராக்கி கூடியுள்ளது.

இந்நிலையில், ஈரானின், அதிக எண்ணெய் வளம் கொண்ட, குஜெஸ்தான் மாகாணத்தில், 5 ஆயிரம் கோடி பேரல்கள் அளவிற்கு எண்ணெய் வளம் கொண்ட புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி((Hassan Rouhani)) அறிவித்திருக்கிறார்.

பாலைவன நகரமான யாஸ்தில் ((Yazd)) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியொன்றியில் உரையாற்ற ஈரான் அதிபர், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
தற்போதைய நிலையில், 15 ஆயிரம் கோடி பேரல்கள் அளவுள்ள கச்சா எண்ணெய், ஈரானிடம் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.