​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா?

Published : Nov 10, 2019 4:14 PM

அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா?

Nov 10, 2019 4:14 PM

அயோத்தியில் மத்திய அரசு வழங்கும் மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்வது குறித்து வரும் 26ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக, உத்தரப்பிரதேச சன்னி வஃக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த வாரியத்தின் தலைவர் ஜாஃபர் ஃபரூகி ((Zafar Farooqui)), நிலத்தை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்து வரும் 26ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.

நிலத்தை பெற்றுக் கொள்வது குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு சிலர் நிலத்தை பெற்று மசூதியுடன் கூடிய கல்வி நிறுவனத்தை கட்டமைக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாகத் தெரிவித்தார்.