​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு, பெண் படுகாயம்

Published : Nov 10, 2019 11:27 AM

ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு, பெண் படுகாயம்

Nov 10, 2019 11:27 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

மூதாட்டி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆழியார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அர்த்தனாரி பாளையம் கிராமத்துக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அந்த யானை நேற்று இரவு ராதாகிருஷ்ணன் என்ற விவசாயியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த திருமாத்தாள் என்ற மூதாட்டியை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், 3 கும்கி யானைகள் மூலம் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இறந்த ராதாகிருஷ்ணனின் உடல் கூறாய்வு முடிந்த நிலையில், உறவினர்கள் வாங்க மறுத்து, நாலு மூலை சாலை என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். யானையை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க கோரிய அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர்.