​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி

Published : Nov 10, 2019 11:20 AM

ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி

Nov 10, 2019 11:20 AM

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்புகள் நிதி உதவியை அறிவித்துள்ளன.

பல ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்த அயோத்தி பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அங்கு ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் அஸ்ஸாமைச் சேர்ந்த 21 இஸ்லாமிய சமுதாயங்களைக் கொண்ட அமைப்பு, அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அஸ்ஸாம் சிறுபான்மையினர் வளர்ச்சி வாரியத்தின் தலைவருமான மோமினுல் அவால்,"உச்சநீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகளைத் தகர்த்துள்ளதாகக் கூறிய அவர், அந்தக் கோயிலைக் கட்டுவதற்காக அமைக்கப்படவுள்ள அறக்கட்டளைக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.