​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரலாற்று உண்மைகள் வெளியாகியுள்ளன -மோகன் பகவத்

Published : Nov 10, 2019 11:17 AM

வரலாற்று உண்மைகள் வெளியாகியுள்ளன -மோகன் பகவத்

Nov 10, 2019 11:17 AM

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டும் பணியில் அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீண்ட கால சட்டப்போராட்டத்தின் முடிவு வரலாற்றில் புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதால் அழகான கோவிலை எழுப்ப அனைவரும் ஒன்று சேருமாறும் ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுத்துள்ளது.