​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மிலாது நபி வாழ்த்து

Published : Nov 09, 2019 7:29 PM

முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மிலாது நபி வாழ்த்து

Nov 09, 2019 7:29 PM

மிலாதுநபி திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "எல்லா நல்ல செயல்களும் தர்மமாகும்" என்றுரைத்த இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த பொன்னாளில், உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைத்திட வேண்டும் என்று வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மிலாதுநபி வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அண்ணல் நபிகளாரின் போதனைகளும், சிறந்த அறிவுரைகளும் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டியவைகள் மட்டுமின்றி, போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என தெரிவித்தள்ளார்.