​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“வாடல்” நோயால் வாடி காய்ந்து போகும் வெற்றிலைகள் - விவசாயிகள் கவலை

Published : Nov 09, 2019 6:52 PM

“வாடல்” நோயால் வாடி காய்ந்து போகும் வெற்றிலைகள் - விவசாயிகள் கவலை

Nov 09, 2019 6:52 PM

கரூர் சுற்றுவட்டாரத்தில் வெற்றிலைக் கொடிகளைத் தாக்கும் வாடல் நோய்க்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், புகழூர் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் 104 கவுளி கொண்ட ஒரு சுமை கற்பூர வெற்றிலை ஆயிரத்து 500 ரூபாய்க்கும் வெள்ளைக் கொடி வெற்றிலை 800 ரூபாய் முதல் ஆயிரத்து 200 வரையும் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மழைக்கால நோயான வாடல் நோயால் வெற்றிலைகள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நோயால் வெற்றிலைகள் காய்ந்து பெரும் இழப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்துகள் தெளித்தால் இதனை சரிசெய்யலாம் என்று கூறும் அதிகாரிகள், திங்கட்கிழமை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்க உள்ளதாகக் கூறினர்.