​​ நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் ரூ.1,00,000 கோடி ரூபாய் ஏய்ப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் ரூ.1,00,000 கோடி ரூபாய் ஏய்ப்பு

Published : May 02, 2018 9:25 PM

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் ரூ.1,00,000 கோடி ரூபாய் ஏய்ப்பு

May 02, 2018 9:25 PM

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் 1 லட்சம் கோடி ரூபாய் ஏய்க்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமான கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலின் அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த 2017 - 18 ம் நிதியாண்டில் 5 ஆயிரத்து 152 மோசடிகளில் 28 ஆயிரத்து 459 கோடி ரூபாய் ஏய்க்கப்பட்டுள்ளது.

இது 2016-17ம் நிதியாண்டில் 23 ஆயிரத்து 933 கோடி ரூபாயாக இருந்தது. 2013ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் 1ம் தேதி வரையிலும் 23 ஆயிரத்து 866 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 1 லட்சத்து 718 கோடி ரூபாய் வரையிலும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.