​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சரியான நேரத்தில் கிடைத்த மேட்டூர் அணை நீர் - சம்பா தாளடி பணிகள் இலக்கை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல்

Published : Nov 09, 2019 3:18 PM

சரியான நேரத்தில் கிடைத்த மேட்டூர் அணை நீர் - சம்பா தாளடி பணிகள் இலக்கை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல்

Nov 09, 2019 3:18 PM

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததால் தஞ்சை மாவட்டம் சம்பா தாளடி நடவில் அதன் இலக்கை எட்டியுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.

மாவட்டம் முழுவதுமே கடந்த 7 ஆண்டுகளாக போதிய மழையின்றியும் அணை நீர் சரியான நேரத்தில் கிடைக்காமலும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததால், மாவட்டம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா தாளடி பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.