​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாள்தோறும் விதிகளை மீறினார் ராகுல்..!

Published : Nov 09, 2019 3:00 PM

நாள்தோறும் விதிகளை மீறினார் ராகுல்..!

Nov 09, 2019 3:00 PM

எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு ((Spg)) விதிகளை நாள்தோறும் ராகுல் மீறியதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்  படுகொலைக்கு பிறகு அவருடைய மனைவி சோனியா, மகன் ராகுல், மகள் பிரியங்காவுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதற்குப் பதிலாக இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 3 பேரும் விதிகளை மீறியதால் எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளன.

புல்லட் புரூப் வாகனங்களை டெல்லியில் 1,892 முறையும், டெல்லிக்கு வெளியே 250 முறையும் ராகுல் தவிர்த்து விட்டதாகவும், குஜராத்தில் புல்லட் புரூப் இல்லாத வாகனத்தில் சென்றபோது ராகுலுடன் இருந்த வீரர் கல்வீச்சில் காயமடைந்ததாகவும் தெரிவித்தன. 143 வெளிநாட்டு பயணங்களில் எஸ்பிஜி வீரர்களை ராகுல் அழைத்து செல்லவில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.