​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தி வழக்கு - உச்சநீதிமன்றத்தின் கருத்து

Published : Nov 09, 2019 2:56 PM

அயோத்தி வழக்கு - உச்சநீதிமன்றத்தின் கருத்து

Nov 09, 2019 2:56 PM

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், இந்து மற்றும் முஸ்லீம் தரப்பு வாதங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது. 

ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், காலி இடத்திலேயே பாபர் மசூதி கட்டப் பட்டதாகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள் நீடித்து வந்த நிலையில், இந்த வாதங்கள் குறித்த ஏராளமான கருத்துகளை உச்ச நீதிமன்றம் தனது நீண்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

இவற்றில் முதன்மையாக...

சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையை சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும்.

பாபர் மசூதி பாபரின் தளபதியாக இருந்த மீர் பாகி என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

12 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை அந்த இடம் எப்படி இருந்தது என்பதற்கான துல்லியமான சான்றுகள் இல்லை

பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதை தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் முன்பு இருந்த கட்டிட அமைப்பு இஸ்லாமிய கட்டிடக் கலையின் படி இல்லை என்ற தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது

ஏற்கனவே இருந்த கட்டிட அமைப்பு இந்து கோவில் என்பதற்கான துல்லியமான சான்றுகளும் இல்லை

கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் இல்லை

பாபர் மசூதியில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர்

1857 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்துக்கள் பாபர் மசூதியின் உள் முற்றத்தில் வழிபட தடை விதிக்கப்படவில்லை

1857 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள் முற்றம் வெளி முற்றம் என்று சம்பந்தப்பட்ட பகுதி பிரிக்கப்பட்டது

வெளி முற்றத்தில் இந்துக்களும், உள் முற்றத்தில் இஸ்லாமியர்களும் வழிபாடு நடத்தி வந்துள்ளனர்

ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே அயோத்தி மக்கள் ராமர், சீதையை வழிபட்டு வந்துள்ளனர்

சம்பந்தப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை நிராகரிக்க முடியாது

மத நம்பிக்கை என்பது அடிப்படை உரிமை, எந்த மதத்தின் நம்பிக்கையும் மற்றொரு மதத்தின் நம்பிக்கையில் குறுக்கிட முடியாது

நீதிமன்றம் மத நம்பிக்கையை புறக்கணித்து விட முடியாது. அதே நேரத்தில் சமநிலையை பாதுகாக்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்கள், மதங்கள் குறித்த நம்பிக்கையை பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது