​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீ

Published : Nov 09, 2019 1:30 PM

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீ

Nov 09, 2019 1:30 PM

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில், இருவர் பலியான நிலையில் சுமார் 150 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் மற்றும் வறண்ட சூழல் காரணமாக 17க்கும் மேற்பட்ட இடங்களில் தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீ பருவங்கள் வரிசையில் தற்போதைய காட்டுத்தீயும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவி வருகிறது. அடுத்து வரும் வாரங்களில் காட்டுத்தீயானது கட்டுக்குள் வந்து நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.